கோலாலம்பூர், ஜூலை 30-
இம்மாதம் 4ஆம் தேதி வரையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று மோசடி கும்பலிடம் சிக்கியுள்ள 139 மலேசியர் இன்னும் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் மியன்மார், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஜூலை 4ஆம் தேதி வரை பதிவான கும்பலால் பாதிக்கப்பட்ட 672 மலேசியர்களில் இவர்களும் அடங்குவர். மேலும் அந்த எண்ணிக்கையில் 533 பேர் அதாவது 79 சதவீதம் பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிமக்களை, குறிப்பாக இளைஞர்களை, ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலை உள்துறை அமைச்சு தீவிரமாகப் பார்க்கிறது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்புடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
தேசிய காவல்துறை மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் கும்பலை ஒடுக்குவதற்கும்,
இந்தக் குற்றத்தின் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உள்துறை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.
0 Comments