குவாந்தான், ஜூலை 30-
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த நிலையில் அதில் பயணித்து தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரா, குவாய் இடைநிலைப்பள்ளி பள்ளியின் அருகிலுள்ள பிரதான சாலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஜெராண்டுட், டுரியான் ஈஜாவ் இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முகமட் சப்ரி பாக்கார் (வயது 59) பலியானதாக பெரா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஸுல்கிப்ளி நாசிர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் கம்போங் குவாயிலுள்ள தன் சகோதரர் வீட்டிற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு தீப்பற்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட கார் 80 விழுக்காடு தீயில் சேதமடைந்தது. இருப்பினும், கார் தீப்பற்றுவதற்கு முன்பு அங்கிருந்த பொதுமக்கள் காரில் சிக்கியவரை வெளியே கொண்டு வந்ததாக ஸுல்கிப்ளி தெரிவித்தார்.
0 Comments