கோலாலம்பூர், ஜூலை 30-
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியத்தின் (EPF) மொத்த முதலீட்டு வருமானம் RM18.31 பில்லியனாக 13 சதவீதம் சரிந்ததற்கு பங்குச் சந்தையின் பலவீனமான செயல்பாடே காரணம் என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெ20.99 பில்லியனாக அதன் முதலீட்டு வருமானம் இருந்ததாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் (MOF) கூற்றுப்படி, உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிக முதலீட்டையும் நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டு சொத்துக்களின் விற்பனையுடன் எந்த தொடர்பும் இல்லை.
இந்த நிலைமைக்கு அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக இறுக்கம் மற்றும் அமெரிக்காவின் நிச்சயமற்ற வர்த்தகக் கொள்கைகள் காரணமாகும்.
பல மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையைத் தளர்த்தத் தொடங்கியுள்ள போதிலும், உலகளாவிய நிலையற்ற அரசியல் நிலை, நிதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்த கவலைகள் சந்தை உணர்வைக் குறைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அவர் நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறிப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலையான முதலீட்டு செயல்திறனைப் பராமரிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, மூலோபாய சொத்து ஒதுக்கீட்டால் (SAA) வழிநடத்தப்படும் ஒழுக்கமான முதலீட்டு அணுகுமுறையை ஊழியர் சேமநிதி வாரியம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments