loader
தூருன் அன்வார் பேரணியை சாதரணமாக எண்ணிவிட வேண்டாம்! -டத்தோஸ்ரீ சரவணன்

தூருன் அன்வார் பேரணியை சாதரணமாக எண்ணிவிட வேண்டாம்! -டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா, ஜூலை 27-
கடந்த சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த தூருன் அன்வார் பேரணியில் இந்தியர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாததை அரசாங்கம் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம் என மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

இந்த பேரணியில் இந்தியர்கள் அதிகமாக கலந்து கொள்ளாதது நாட்டில் தற்போது நடப்பதை அவர்கள் ஆதரிப்பதாக நாம் நினைத்து கொள்ள முடியாது. மேலும் இந்த பேரணி அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பேரணியாக அமைந்துள்ளது.

ஆகையால் குறைந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டது அவர் அரசாங்கத்தை நம்புவதாக அர்த்தமாகாது. இந்த பேரணி அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இதனை எச்சரிக்கையாக எடுத்து கொள்வது அரசின் கையில்தான் உள்ளது. என்னை பொருத்தவரை இது ஒரு தற்போது நிலையை நமக்கும் உணர்த்து ஒரு விழிப்பு மணியாகும். இதை தவரைதான் நாங்கள் தேசிய முன்னணி ஆட்சியில் புரிந்தோம் என அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. ஆகையால் அதனை அரசு புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News