புத்ராஜெயா, ஜூலை 25-
சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றம் செய்யாதவர்கள் தண்டனை அனுபவிப்பதாகவும் அவர்களின் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரி உள்துறை அமைச்சில் தேசிய நட்புறவு பொதுநல அமைப்பு மகஜர் வழங்கியது.
சொஸ்மா சட்டத்தை நிறுத்த வேண்டுமென நாங்கள் கூறவில்லை மாறாக குற்றம் செய்யாதவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பதைதான் நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.
உண்மையிலேயே அவர்கள் குற்றம் செய்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள். மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நியாயமற்ற செயல்.
இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.
குற்றம் செய்தவர்களுக்கு நியாயம் கேட்டு நாங்கள் இங்கு வரவில்லை மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என அமைப்பின் தலைவர் ஜோசப் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்புடி நஸுத்தியோன் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் சீர்தூக்கி பார்த்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சின் தரப்புடன் தொடர்பு கொண்டு தீர்வுக் கிடைக்கும் வரை போராடுவோம் என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று உள்துறை அமைச்சிடம் மகஜர் வழங்க அமைப்பை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அமைச்சகத்தின் நுழைவாசல் அருகில் கூடி மகஜரை வழங்கினர்.
0 Comments