கோலாலம்பூர், ஜூலை 25-
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட சிறப்பு அறிவிப்பின்போதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ரஹ்மா உதவித் திட்டத்தின் வழி மாதத்திற்கு வெ.100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மோசடி கும்பல் ஒன்று மக்களை ஏமாறறும் வகையில் இந்த உதவித் திட்டத்திற்கான பதிவு என ஒரு இணைய பதிவை பரப்பி வருகிறது. இதனை மக்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என
நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த உதவித் திட்டத்திற்கு எந்த விண்ணப்பமும் தேவையில்லை என்று அமைச்சு சமூக ஊடக தளமான Instagram இல் விளக்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற போலி செய்திகளால் எளிதில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாவிட்டால் இணைய இணைப்பையும் (link) திறந்து பார்க்க வேண்டாம். மோசடிக்கு ஆளாகாமல் தவிர்க்க கவனமாக இருங்கள் என நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments