கோலாலம்பூர், ஜூலை 25-
அன்வார் பதவி விலக வேண்டும் என நாளை டத்தாரான் மெர்டேக்காவில் நடத்தப்படவுள்ள பேரணியில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவுத் தலைவர் அவ்னான் அமிமி தாயிப் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி பேரணி பிரதமர் மீதான எங்களின் எதிர்ப்பை காட்டுகிறது. மாறாக நாங்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆட்சி கலைக்க கூறவில்லை என்றார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் நாங்கள் இந்த பேரணியை நடத்தவுள்ளோம். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் திறமைசாளிகள் பலர் உள்ளனர் அவர்களின் ஆட்சி நடத்தப்படலாம். அப்படியும் அங்கு ஆள் இல்லை என்றால் ஆட்சியை எங்களிடம் (பெரிக்காத்தான் நேஷன்ல்) கொடுங்கள் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனல் பிரதமருக்கு எதிராக வாக்கெடுப்பை வழங்கியபோதும் பிரதமர் பதவையை அன்வார் தற்காத்து கொண்டார். ஆனால் எங்களின் இந்த போராட்டம் தொடரும். அதற்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தைரியத்துடன் முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
0 Comments