கோலாலம்பூர், ஜூலை 24-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் செயல்கள், குறிப்பாக ஷம்ரி வினோத் மற்றும் பிர்டாவ்ஸ் மீது நாடு தழுவிய அளவில் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் இல்லை என்று அண்மையில் சட்டத் துறை அமைச்சர் கூறியிருப்பது நாட்டிலுள்ள இந்துகளின் மனதை பெரிதளவு பாதித்துள்ளதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலுள்ள 3R சட்டம் ஒருசராவருக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை ஒட்டுமொத்த இந்து சமயம் வண்மையாக கண்டிக்கிறது. எங்களை பொருத்தவரை எந்த மதமாக இருந்தாலும் அதனை இழிவாக பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஓராண்டு காலமாக சில தரப்பினர் இந்து சமயத்தை இழிவுப்படுத்தி பேசி வருகின்றனர். அவர்கள் மீது சட்டம் ஏன் பாயவில்லை? அரசாங்கம் தயங்குகிறாதா இல்லையென்ற சட்ட ஒருசாராவர்களுக்கு மட்டுதான் பயனளிக்கிறதா என டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பினார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்றும் சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை வண்மையாக கண்டிக்கிறோம். எங்கள் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கட்சிபேதங்களை தாண்டி சமுதாயம் என்ற குடையின்கீழ் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என அவர் சொன்னார்.
இன்று நடந்த நாடாளுமன்ற தொடருக்கு பின்னர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவரங்களை கூறினர்.
0 Comments