கிள்ளான், ஜூலை 22-
மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் Klang Centro Mall முதல் மாடியில் மாபெரும் அளவில் தீபாவளி கல்யாண பசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷான் தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் 62 கடைகள் இடம் பெறும்.
இந்த விழாவில் நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டார்க்கி, சந்தேஷ், பாலன் காஷ், அருண் போய், உட்பட மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் இன்னிசை விழாவும் இடம் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.
சுமார் 15,000 பேரின் வருகையை எதிர்பார்க்கிறோம்.இதுவரை 60 விழுக்காடு கடைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த தீபாவளி கல்யாணம் பசார் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இதனிடையே இந்த தீபாவளி கல்யாணம் பசார் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்த 750 இட வசதிகள் உள்ளன என்று விக்ரம் தெரிவித்தார்.
குளிர்சாதன வசதியுடன் கூடிய மண்டபத்தில் தீபாவளி கல்யாணம் பசார் நடைபெறுவதால் பொதுமக்கள் திரண்டு வந்து விழாவில் கலந்து கொள்ளலாம்.
மேலும் போதுமான கழிப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த தீபாவளி கல்யாணம் பசார் நிகழ்வில் கடைகளை எடுக்க விரும்புவோர் 016 - 2757465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
0 Comments