loader
ரவூப் இந்து சங்கப் பேரவையின் 47ஆவது திருமுறை ஓதும் போட்டி: 24 மாணவர்கள் பங்கெடுப்பு!

ரவூப் இந்து சங்கப் பேரவையின் 47ஆவது திருமுறை ஓதும் போட்டி: 24 மாணவர்கள் பங்கெடுப்பு!

ரவூப், ஜூலை 10-
ரவூப் வட்டார இந்து சங்க பேரவையின் ஏற்பாட்டில் 47ஆவது திருமுறை ஓதும் போட்டி ரவூப் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது.

திருமுறை ஓதும் போட்டி, குழு போட்டி, பதிகப்பாராயணம், பஞ்சப்புராணம், பேச்சுப் போட்டி என நடைப்பெற்ற வேளையில் இப்போட்டிகளில் 24 மாணவர்கள் பங்குக் கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 22 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கு கொள்ள தகுதித் பெற்றதாக ரவூப் இந்து சங்கத்தின் துணைத் தலைவர் செல்வகுமாரா தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் நமது சமயத்தை வளர்க்க இதுபோன்ற போட்டிகள் தொடந்து நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போட்டிக்கான பரிசு கோப்பைகளை திரு பார்த்திபன் நன்கொடையாக வழங்கிய வேளையில், ரவூப் இந்து ஆலய சாபா போட்டியில் கலந்து கொண்டவர்கள் உட்பட வருகையாளர்களுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்தனர். அதுமட்டுமின்றி இந்த சமய போட்டியை நடத்த இடம் கொடுத்ததுடன் ரவூப் தமிழ்ப்பள்ளி நிர்வாக முழு ஆதரவை வழங்கியது.

இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பகாங் மாநில இந்து சங்கத்தின் பொருளாளர் மகேந்திரன், ரவூப் இந்து ஆலய சாபாவின் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வருகையளித்தனர்.

சமய போட்டிகளில் தங்களின் பிள்ளைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களின் வருகையும் அமோகமாக இருந்ததுடன் இந்த போட்டியை முறையாக நடத்த முழு ஆதரவை அவர்கள் வழங்கியதாக ரவூப் இந்து சங்க பேரவையின் தலைவர் நவீன்ராஜ் தெரிவித்தார்.

இதற்கிடையில் மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டிக்கு தகுதிப் பெற்றவர்களுக்கு ரவூப் இந்த சங்க பேரவையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News