loader
மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்துடன் இந்தியாவிலிருந்து நியூயார்க்கிற்கு சைக்கிளில் பயணிக்கும் இளைஞர் சஹில்!

மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்துடன் இந்தியாவிலிருந்து நியூயார்க்கிற்கு சைக்கிளில் பயணிக்கும் இளைஞர் சஹில்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-
தரமான உணவு நாம் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றால் நாம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். ஆகையால் மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள சைக்கிளில் உலக முழுதும் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய தாம் தயாரிவிட்டதாக இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கூறுகிறார்.

அந்த வகையில் இந்தியாவில் 20 மாநிலங்களை கடந்து தற்போது மலேசியாவை வந்தடைந்துள்ளதாகவும் இந்த பயணம் நியூயார்க் வரை தொடரும் என்றார் அவர்.

இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இஷா யோகா நிலையத்தில் சஹிலின் சைக்கிள் பயணத்தை மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்தை வரவேற்கும் வகையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. சஹிலுக்கு பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் சிறப்பு செய்தார்.

சத்குரு-வின் மண்ணை காப்போம் என்ற பிரச்சாரம் தன்னை ஈர்த்ததாகும், 65 வயதுடைய அவரே இந்த பிரச்சாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் வளம் வந்தது தன்னை கவர்ந்து இந்த பிரச்சாரத்தை என்னையும் முன்னெடுக்க செய்ததாக சஹில் தெரிவித்தார்.

மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்திற்காக உலக நாடுகளுக்கு சைக்கிளில் பயணம் செய்யவிருப்பதாக கூறியபோது பெற்றோர் அதனை மறுத்தனர். இருந்தும் கொஞ்ச பணத்துடன் இந்த பிரச்சாரத்தை தாம் தொடர்ந்ததாக அவர் சொன்னார்.

இயற்கை வழங்கிய மண் வளத்தை நாம் காக்க மறந்தால் வருங்காலத்தில் மண் வளத்தை இழந்து விடும். நம்மாலும் ஆரோக்கியமான உணவை உண்ண முடியாது. அதுமட்டுமின்றி 2008 முதல் 2013 வரை மலேசிய மண் வளம் 58% விழுக்காடு குறைந்துள்ளது. இது பிற நாடுகளை காட்டிலும் பரவாயில்லை என்றாலும் தற்போது உள்ள நிலை நீடித்தால் இங்கு மட்டுமல்ல உலக முழுவதிலும் நம்மால் இயற்கை உணவு பெற முடியாது நிலை ஏற்படும்.

தற்போது மேற்கொள்ளப்படும் விவசாய முறையில் செடிகள் செழிப்பாக இருக்க ரசாயண கலந்த உரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு செழிப்பான உற்பத்தியை விளைவித்தாலும் மண் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேம்பாடு கண்ட பல நாடுகளில் பல கட்டடங்கள் அதன் சிறப்பாக உள்ளன. இது அந்த நாட்டிற்கு பெருமை அளிப்பதாக நாம் நம்புகிறோம். ஆனால் அந்த நாடுகள் மண் வளத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவுதான் உயரமான கட்டடங்கள் இருந்தாலும் கூட ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காத பட்சத்தில் அந்த நாடுகள் பஞ்சத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

ஆகையால் ஆரோக்கியமான வாழ்க்கை நாம் தொடர்ந்து வாழ மண் வளத்தை காப்போம் என சஹில் தெரிவித்தார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவிலிருந்து அவர் ஈப்போவிற்கு பயணிக்கிறார். அதனை தொடந்து மறுநாள் பினாங்கிலிருந்து நாட்டை கடந்து அவரின் பயணம் நியூயார்க் வரை தொடரவுள்ளது.

-காளிதாசன் தியாகராஜன் / காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News