loader
என்எல்எப்சிக்கு வெ.40 மில்லியன் வருமானம்!  அங்கத்தினருக்கு 8% லாப ஈவு; 10 கோடி வெள்ளி போனஸ்!

என்எல்எப்சிக்கு வெ.40 மில்லியன் வருமானம்! அங்கத்தினருக்கு 8% லாப ஈவு; 10 கோடி வெள்ளி போனஸ்!

கோலாலம்பூர், ஜூன் 30-
நாட்டின் முதன்மை கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டில் வெ.40 மில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் தெரிவித்தார்.

நாட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்கி வருகிறது.

கூட்டுறவு சங்கம் தனது அங்கத்தினர்களுக்கு பலவிதமான சலுகைகள் நன்மைகள் வழங்குவதால் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை 3 ஆவது இடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் இரு இடங்களில் அரசாங்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இதற்கு அடுத்த படியாக தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் வெற்றிகரமாக வளர்ச்சிக்கு அங்கத்தினர்களின் பேராதரவு முக்கிய காரணம் ஆகும்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் கடந்த 57 ஆண்டுகளாக பலவிதமான சலுகைகளை அங்கத்தினர்களுக்கு வழங்கி வருகிறது என அவர் சொன்னார்.

இன்று பெட்டாலிங் ஜெயா ஆர்மாடா தங்கும் விடுதியில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் 57 ஆவது ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈடு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு சந்தாதாரர்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து 50 விழுக்காட்டை கூட்டுறவு சங்கம் அவர்களுக்கு போனாஸாக வழங்கியது. அதேபோல் இவ்வாண்டு மேலும் 50 விழுக்காட்டை போனஸாக வழங்கவுள்ளதாகவும் இது 60 ஆயிரம் அங்கத்தினருக்கும் நன்மை அளிக்கும் என்றும் அவர்  சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News