loader
ஆலயப் பிரச்சினைகளை முறையாக கையாளுவதற்கு  இந்து புளூபிரிண்ட் மஹிமா துரிதமான பணிகள் தொடக்கம்! -டத்தோ ந.சிவகுமார்

ஆலயப் பிரச்சினைகளை முறையாக கையாளுவதற்கு இந்து புளூபிரிண்ட் மஹிமா துரிதமான பணிகள் தொடக்கம்! -டத்தோ ந.சிவகுமார்

பத்துகேவ்ஸ், ஜூன் 28-
ஆலயப் பிரச்சினைகளை முறையாக கையாளுவதற்கு  இந்து புளூபிரிண்ட் ஒன்றை தயார் செய்யும் பணிகளை மஹிமா துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்று மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இந்தியர் புளூபிரிண்ட் எனப்படும் திட்ட வரைவு குறித்து பேசப்பட்டு வரும் வேளையில் மஹிமா  இந்துக்களுக்கு என புளூபிரிண்ட்டை தயார் செய்யும் முயற்சியில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மஹிமாவின் துணைத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ செல்வம் மூக்கையா வாயிலாக இந்த திட்டம் மிக  துரிதமான முறையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில்  இந்து சமயம், ஆலயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் புகைந்து வருகிறது.
இந்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இது வரையில் எடுக்கப்பட வில்லை.

இப்பிரச்சினைகள் அனைத்திற்கும்   முழுமையாக தீர்வு காணும் வகையில்  இந்த புளூபிரிண்ட் மிகவும்  அவசியமானதாக அமையும் என நம்பப்படுகிறது.

அதே வேளையில் மஹிமாவின் கீழ் சட்ட பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கஞர் ஸ்ரீதரன் தலைமையேற்பார் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News