loader
மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் காலமானார்!

மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் காலமானார்!

கோலாலம்பூர், ஜூன் 17-

மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ ஜி. பழனிவேல் உடல் நலக்குறைவால் இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்
காலமானார் எனும் தகவலை  மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

மஇகாவின் 8ஆவது தலைவராக டத்தோஶ்ரீ பழனிவேல்
மிக சிறப்பாக சேவையாற்றினார்.

அதே வேளையில் கடந்த 1990, 1995,1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

பின் 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.

ஆரம்பத்தில் அவர் தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சின்  நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

அதன் பிறகு கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சர், மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை  துணையமைச்சர், தோட்டத் தொழில்கள், மூலப் பொருட்கள் துறை  துணையமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

2011ஆம் ஆண்டு அவர்  பிரதமர் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்   இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

மஇகா தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின் அவர் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

0 Comments

leave a reply

Recent News