கோலாலம்பூர் ஜூன் 14-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பத்திரிகை துறையில் பணியாற்றி முத்திரை பதித்திருக்கும் செ.வே. முத்தமிழ் மன்னன் இன்று மலேசிய ஊடக கவுன்சில் நிறுவன வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று உலக வாணிப மையத்தில் செய்தியாளர்கள் தின கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் மலேசிய ஊடக கவுன்சில் நிறுவன வாரிய உறுப்பினர்களின் பெயர்களை அவர் அறிவித்தார். இந்த வாரியத்தில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் அவர்களும் இடம் பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.
தமிழ்லென்ஸ் ஊடகம் சார்பாக முத்தமிழ் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments