கோலாலம்பூர் ஜூன் 14-
தகவல் தொடர்பு துறை அமைச்சின் அதிகாரப்பூர்வ மீடியா அட்டையை வைத்திருக்கும் செய்தியாளர்கள் 57 ஆசியான் உறுப்பு நாடுகளின் இடங்களுக்குச் செல்வதற்கு ஏர் ஆசியா நிறுவனம் 50 % கட்டண கழிவு வழங்கும் என அதன் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் அறிவித்தார்.
இன்று உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான செய்தியாளர்கள் விழாவில் இத்திட்டத்திற்கு ஏர் ஆசியா நிறுவனத்தின் டான்ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் டத்தோ ஃபாமி பட்சில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் ஆசியான் தலைவராக மலேசியா பொறுப்பு ஏற்றிருப்பதன் காரணமாக தகவல் தொடர்பு அமைச்சுக்கும் குறைந்த விமான கட்டண ஏர் ஆசியாவிற்குமிடையே நடைபெற்ற வியூக ஒத்துழைப்பின் பலனாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பட்சில் தெரிவித்தார்.
இந்தப் பயண டிக்கெட்டுகளுக்கான முன் பதிவு 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறது. பயண காலம் 2026 ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஆகும் .
இச்சலுகை ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் . இதன் டிக்கெட் பதிவு மற்றும் இதர விவரங்களை தகவல் அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றும் அமைச்சர் ஃபாமி சொன்னார்.
0 Comments