கோலாலம்பூர் ஜூன் 14-
நாட்டில் உள்ள ஊடகத்துறையைச் சார்ந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மூன்று கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் உருமாற்றத்தை செயல்படுத்துவது மற்றும் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் உதவுவதற்காக இந்த மூன்று கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான செய்தியாளர்கள் விழாவில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாமி பட்சில் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கிய நிதியில் இதுவே அதிகமானது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“உண்மையும் நிலைத்தன்மையும் ஊடகத்தின் கருப்பொருளாக இருக்க வேண்டும்” என அவர் செய்தியாளர்களை கேட்டுக் கொண்டார்.
0 Comments