கெடா, ஜூன் 3-
ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
குருமு ஸ்டார் காம்பேட் 2025 முயாய் தாய் தற்காப்புக்கலை போட்டியில் நாடு தழுவிய மக்கள் அள்வில் 170க்கும் மேற்பட்ட முய்த்தாய் வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியை குருமு, எம்.எம்.ஏ அக்கடமி, எம்ஐடி மற்றும் மஇகா தேசிய விளையாட்டு பிரிவு இணைந்து நடத்துகின்றது.
அனைத்து இனத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போட்டியை வழி வகை செய்தவர் ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மஇகாவின் தேசிய தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.விக்னேஷ்வரன் என்று ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
தாய்லாந்தின் பாரம்பரிய போர்க்கலையான முயாய் தாய் தற்காப்பு கலையை பல சமூக மக்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
குறிப்பாக இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போட்டி விளையாட்டில் முனைப்புடன் கலந்துக்கொள்வது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மாஸ்டர் பிரகாஸ் குருநாயுடு தலைமையில் நடைபெற்ற இப்போட்டி, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு எடைப் பிரிவுகளில் நடைபெற்றது. வீரர்கள் தங்களின் மிகுந்த உழைப்பும், வீர உணர்வும் நிரம்பிய ஆற்றலுடன் போட்டியில் கலந்துகொண்டனர். இதனால் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
போட்டியை மஇகாவின் தேசிய பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் அவர்கள் தேசிய தலைவர் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மேலும், கெடா மஇகாவின் மாநிலத் தலைவர் திரு எஸ். கே. சுரேஷ் மற்றும் அனைத்து கெடா மஇகா குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு, எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மேலும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைத் தலைவர் டத்தோ’ செல்வம் மோகையா, ஏய்ம்ஸ்ட் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் சதாசிவம், மற்றும் பணியாளர்கள், மாணவர் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருக்கு சிறப்பான நன்றிகள்.
இவ்விழாவின் உணவு தேவையை வழியமைத்த டத்தோ’ ஜே தினகரன் பினாங்கு மாநில மஇகா தலைவர் மற்றும் ஜெயா ரெஸ்டாரன் & கேட்டரிங் இயக்குநர் அவர்களுக்கும் நன்றி. ஏய்ம்ஸ்ட் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் கிரண் ரெட்டி, பெர்லிஸ் மாநில மஇகா தலைவர் திரு எஸ். இலங்கோ, CWC உறுப்பினர்கள், டத்தோ எஸ்.எம்.முத்து மற்றும் டாக்டர் டி. நோவலன், மஇகா செயற்குழு செயலாளர் டத்தோ’ டாக்டர் ஏ.டி குமரராஜா மற்றும் மஇகாவின் கிளைத் தலைவர்கள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உற்சாகத்தை ஊட்டினர்.
நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பைதிகள், பயிற்றுநர்கள், நடுவர் குழு, பெற்றோர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் மஇகா மனமார்ந்த நன்றிகளைத் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்துக்கொண்டார்.
0 Comments