புதுடில்லி, மே 9-
துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டு வந்துள்ளது.
துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
0 Comments