கோலாலம்பூர், ஏப்.24-
தேசிய தெக்குவாண்டோ போட்டியில் 16 தங்கங்களை வென்று கோலாலம்பூர் தெக்குவாண்டோ அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு சுழற்கிண்ணத்தை வென்றுள்ளது.
தேசிய அளவிலான இப்போட்டி இம்மாதம் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நீலாய் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இம்முறை இப்போட்டில் கோலாலம்பூர் தெக்குவாண்டோ அணி 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெங்கலம் பதங்களை பெற்று முதல் இடத்தை வென்றது. இப்போட்டி வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைப்பெற்றது.
இப்போட்டில் வெற்றிப் பெற்ற கோலாலம்பூர் அணியை பாராட்டும் வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள், அணியின் நிர்வாகக் குழு ஆகியோரை சந்தித்தார்.
விளையாட்டாளர்களின் அயராத உழைப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி முறையும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என அவர் சொன்னார்.
மேலும் கோலாலம்பூர் தெக்குவாண்டோ அணி வரும் காலங்களில் அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றியை அடைய கோலாலம்பூர் விளையாட்டு மன்றத்துடனும் கோலாலம்பூர் தெக்குவாண்டோ அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் சொன்னார்.
மேலும் இப்போட்டியில் வெற்றிப்பெற்ற விளையாட்டாளர்கள் ஆசியான் சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புகளும் உள்ளது. வெற்றிப்பெற்ற இந்த குழுவில் பத்து வட்டாரத்தை சேர்ந்த 10 விளையாட்டாளர்கள் இருப்பது தமக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இளைஞர்கள் நல்ல வழியில் செல்ல விளையாட்டு துறை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகையால் இளைஞர் இதுபோன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
0 Comments