கோலாலம்பூர்,ஏப்.9-
உள்நாட்டு திரைப்படங்கள் என்றாலே அது ஒரே பாணியில்தான் இருக்கும். காட்சியமைப்புகளும் திருப்தியாக இருக்காது, கதையும் சுமாராதான் இருக்கும் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல் தற்போதைய நம் உள்நாட்டு திரைப்படங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இம்மாதம் 17ஆம் தேதி உள்நாட்டு திரையரங்குகளில் வெளியிடு காணவுள்ள Sight and Sound in love பார்வையின் மொழி என்ற திரைப்படம் புதிய பாணியில் இதுவரை உள்நாட்டு திரைப்படத்தில் காணாத கதை அம்சத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
காதலை அடிப்படையாக கொண்ட படம் என்பது அதன் போஸ்டரிலேயே தெரியவந்தது. இம்ம்...காதல் படமா என்ற சிந்தனையில்தான் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை காண சென்றேன்.
ஆனால் காதலை கருவாக வைத்து புதிய பாணியில் இயக்குநர் சந்தோஷ் கேசவன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பார்வையின் மொழி என்ற இத்திரைப்படத்தில் தமிழ் பெயருக்கு ஏற்ற கதை அம்சத்தை இத்திரைப்படம் கொண்டுள்ளது.
பார்த்து, பேசி காதலித்த அனுபங்கள்தான் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் காதலியை பார்க்க முடியாமல் காதலனிடம் பேச முடியாமல் காதலை வெளிப்படுத்திய காட்சிகள் இன்னும் என் மனதைவிட்டு மறையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அருண் மற்றும் அவருக்கு ஈடுகொடுத்து ஒருபடி முக பாவனையிலேயே தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கதாநாயகி ரூபினி அவர்கள்தான் இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர் என்று கூறலாம்.
இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகளில் சில காட்சிகள் இழுவையாக இருந்தாலும் கூட அதனை பெரிதாக பேசவிடாமல் இதர காட்சியமைப்புகள் அனைத்துலக தரத்தில் அமைந்துள்ளன.
காமெடி, காதல், சண்டை என்ற பாணியில் உள்நாட்டு திரைப்படங்களை பார்த்து கொண்டிருந்த நமக்கு இத்திரைப்படம் மாற்றலான காதல் கதையாக அமைந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி என்ன பங்களிக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI முறை அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்துள்ளது என்பதனையும் இத்திரைப்படம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
இப்படி திறமையான நடிப்பு, புதுமையான காதல் கதை என இத்திரைப்படத்தின் சிறப்புகளை கூறும்போது அதன் இசையை பற்றி கூறாமல் இருக்க முடியாது. இசையமைப்பாளர் ஜேயின் கைவண்ணத்தில் அமைந்துள்ள பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
உள்நாட்டு திரைப்படம்தானே...என்ன இருக்க போது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முறையில் தற்போது நமது உள்நாட்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு பார்வையின் மொழி என்ற இத்திரைப்படம் சான்றாக அமைந்துள்ளது.
பார்வை இழந்த அருண் தன் காதலை வாய் பேச முடியாத ரூபனியிடம் தெருவிப்பதை மையாக கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. அவர்களின் காதல் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இத்திரைப்படத்தை IGGY தயாரித்து வெளியிட்டுள்ளார். ஆகையால் இம்மாதம் 17ஆம் தேதி உள்நாட்டு திரையரங்குகளில் வெளியிட காணவுள்ள இத்திரைப்படத்தை பொதுமக்கள் திரையரங்குகளில் கண்டு உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
0 Comments