சென்னை, மார்ச் 26-
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா (வயது 48) இன்று மார்ச் 25 ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
1976 செப்டம்பர் 11ஆம் தேதி கிராமத்தில் பிறந்த மனோஜ், 1999ஆம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் சமுத்திரம் படத்தில் 2001 ஆம் ஆண்டு அல்லி அர்ஜுனா
2002, மகா நடிகன் 2004,.அன்னக்கொடி 2013, மாநாடு 2021, விருமன் 2022, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்புக்கு அப்பால், இயக்குநராகவும் பணியாற்றிய மனோஜ், மார்கழி திங்கள் என்ற 2023 இல் வெளியாகிய திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், மணிரத்னம் இயக்கிய பொம்பை மற்றும் தயாரிப்பாளர்
ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மனோஜ் 2006ஆம் ஆண்டு நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு அர்த்திகா, மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
மனோஜின் மறைவு தமிழ் திரைப்பட உலகத்தையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்க வைத்துள்ளது
0 Comments