loader
என்னை மீறி ஶ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் ஒரு கல்லையும் அசைக்க முடியாது! -பிரபாகரன்

என்னை மீறி ஶ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் ஒரு கல்லையும் அசைக்க முடியாது! -பிரபாகரன்

கோலாலம்பூர், மார்ச் 20-
என்னை மீறி மஸ்ஜிட் இந்தியா ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாது என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சூளுரைத்தார்.

தற்போது இந்த ஆலயத்தின் விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.

இன்று காலை கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL (Datuk bandar) தரப்பு ஆலயத்திற்கு  சென்றுள்ளது.

அது குறித்து அத்தரப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆலயம் இடிப்படாது என்ற கூற்றை டத்தோ பண்டார் தரப்பு கூறியதைத் தொடர்ந்து, அதனை அரசு உறுதிச் செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்த ஆலயம் ஒருபோது உடைபடாது. அதனை நான் உறுதியாக கூறுகிறேன் என அவர் அழுத்தமாக கூறினார்.

கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்தினர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஒரு தெளிவான விடைக் கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன். ஆகையால் மக்கள் பொருமை காக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நான் பல கூட்டங்களில் கலந்து பேசியுள்ளேன். அதனால் என்னை மீறி ஆலயத்தின் ஒரு கல்லையும் நகர்த்த முடியாது என அவர் மீண்டும் உறுதியாக சொன்னார்.

இதற்கிடையில், ஆலய நிர்வாகம் மற்றும் அரசு இடையே நடந்து வரும் பேச்சு வார்த்தை சிறந்த முறையில் முடிந்தால் மட்டுமே ஆலயம் இடம் மாற்றம் குறித்தும் முடிவு செய்ய முடியும் என அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News