கோலாலம்பூர், மார்ச் 19 –
இனம் மதம் பாராமல் உதவி தேவைபடுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவியளிப்பது நாட்டில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என மஹிமாவின் தலைவர், மஇகாவின் பொருளாளர், மற்றும் டிஎஸ்கே குழுமத்தின் நிர்வாகத்தினருமான டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.
அந்த வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சொந்தவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் இறை நம்பிக்கை கொண்ட ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியதாக அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை கோலாலம்பூர் ஜாலான் புத்ரா பகுதியில் உள்ள ஹைட்ராபாத் உணவகத்தில் நோன்பு திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து ஏழை மக்களுக்கு இந்த உதவிகளை டத்தோ சிவகுமார் வழங்கியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வு PERKIM சபா பெர்ஹாட் கூட்டுறவுக் கழகம் மற்றும் மலேசிய இஸ்லாமிய ரவ்தா உதவி அமைப்புகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இது போன்ற உதவித் திட்டங்களை நாம் செய்வதன் வழி அனைத்து சமூகத்தினரிடமும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை உணர்வை வளர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
எங்களிடம் இருந்து இந்த உதவிகளை பெற்றவர்கள் எங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், ரமலான் மாதத்தில் இத்தகைய உதவிகள் மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர் என டத்தோ சிவகுமார் பெருமிதம் கொண்டார்.
0 Comments