loader
மலேசிய மாணவர்களுக்கு  உலகளவில் புகழாரம்: STEM போட்டியில் ரேய் ஷாமன் மற்றும் நிக்சன் யாப்   தங்கம் வென்று சாதனை!

மலேசிய மாணவர்களுக்கு உலகளவில் புகழாரம்: STEM போட்டியில் ரேய் ஷாமன் மற்றும் நிக்சன் யாப் தங்கம் வென்று சாதனை!

செரம்பான், மார்ச் 18-

செரம்பானில் உள்ள கிங் ஜார்ஜ் வி இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரேய் ஷாமன் மற்றும் நிக்சன் யாப்

2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தீர்வுகளை முன்வைக்கும் உலகளாவிய

போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இவ்விருவரும்

உலகளவில் சிறந்த 11 அணிகளில் இடம்பிடித்து சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் புதுமைக்கான விருதுகளையும் வென்றுள்ளனர்.

இவர்கள் உருவாக்கிய ENVIROGARD சாதனம், காற்று மாசுபாட்டை கண்காணித்து, தரவுகளை சேகரித்து, பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கும் ஒரு புதுமையான கண்டுபிடிப்பு ஆகும்.

உலகளவில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பல உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதால், இந்தப் பிரச்சினையை தடுக்கும் முன்முயற்சியாக இதை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 2022 ஆம் ஆண்டில் F1 in Schools Malaysia போட்டியில் முதல் தடவையாக பங்கேற்று, மூன்றாம் இடம் மற்றும் சிறந்த அணிக்கான ரீதியில் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்பின், பல்வேறு தேசிய & சர்வதேச STEM போட்டிகளில் பங்கேற்று, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து, கண்டுபிடிப்புகளையும் இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ENVIROGARD உருவாக்கம் 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025 ஜனவரியில் முடிக்கப்பட்டதாக ரே ஷாமன் மற்றும் நிக்சன் யாப் ஆகியோர் தெரிவித்தனர்.

நாங்கள் கற்ற கணினி அறிவியல் பாடம் மிகவும் கடினமானது. இருப்பினும் நாங்கள் உற்சாகத்துடன் எங்களின் கண்டுபிடிப்பை முன்னெடுத்தோம் என்று அவர்கள் கூறினர்.

வெற்றியை அறிவித்தபோது, "இந்த வெற்றி எங்களுக்கே எதிர்பாராதது!" என்று ரே ஷாமன் உற்சாகமாக பகிர்ந்துள்ளார். “இந்த போட்டி எங்கள் பள்ளி வாழ்க்கையின் முக்கியமான தருணமாகும். இறுதிநேரம் வரை உழைத்தோம். கடின உழைப்பின் பலன் கிடைத்திருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

இவ்வேளையில் தங்களின் வெற்றிக்கு பெறும் ஆதரவாக இருந்த எங்களின் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இதனைத்தொடர்ந்து

SPM தேர்வுக்கு பின், தாங்கள் ENVIROGARD சாதனத்தை மேம்படுத்த AI மற்றும் Machine Learning முறை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

மேலும், இருவரும் எதிர்காலத்தில் ஒரு தொழில்முனைவோராக ஆகும் முயற்சியில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வேளையில் இவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளனர்: "தோல்வி ஏற்பட்டாலும் முயற்சியை கைவிடாதீர்கள். வெற்றி என்பது கடைசி இலக்காக இருக்க முடியாது; தொடர்ந்து வளர்ச்சியடையுங்கள் என்பதாகும்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News