loader
நோன்பு மாதத்தில் சாப்பிட்டதற்காக சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவர் மீது போலீசில் புகார்!

நோன்பு மாதத்தில் சாப்பிட்டதற்காக சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவர் மீது போலீசில் புகார்!

ஜொகூர் பாரு, மார்ச் 17-

நோன்பு மாதத்தில் சாப்பிட்டதற்காக 21 வயது சீன இளைஞரை ஆடவர் ஒருவர் பல முறை அறைந்துள்ள வீடியோ பரவலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் சம்பந்தப்பட்ட இளைஞரிடமிருந்து புகாரை பெற்றதாகவும், விரைவில் இச்சம்பவம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பால்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில்

மாட்ர் ஒன்றில் அமர்ந்து உணவு உண்ணும் வேளையில் அங்கு வந்த மலார்காரர் ஒருவர் அந்த சீன இளைஞரிடம் தனது மதத்தை என்னவென்று கேட்டுள்ளார்.

பின்பு அந்த இளைஞரின் அடையாள அட்டையை (MyKad) காண்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். அச்சமயம் சம்பந்தப்பட்ட இளைஞர் அதை அவரிடம் கொடுக்க மறுத்தபோது அந்த ஆடவர் அவரை இருமுறை கன்னத்தில் அறைந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது இச்சம்பவம் மக்கள் மத்தியில் புகைந்து வருகிறது.

இளைஞரை அறைந்த அந்த ஆடவரின் நடவடிக்கையை கண்டித்து நிறைய பேர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே போலீஸ் தரப்பில் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 323ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் வெ.2,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என பால்வீர் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தை 07-5563122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Comments

leave a reply

Recent News