கோலாலம்பூர்,மார்ச் 9-
ம.இ.கா இளைஞர் பிரிவை சார்ந்த தமிழ் ஈஸ்வரன் எம்.சி.எம்.சி-க்கு கொடுத்த புகாரை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அந்த புகார் முகநூல் (meta) நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு இப்போது சம்ரி வினோத்தின் சர்ச்சையான பதிவு ஆகற்றப்பட்டதாக தமிழ் ஈஸ்வரன் தெரிவித்தார்.
சமீபத்தில் சம்ரி வினோத் எனப்படும் நபர் வெளியிட்ட முகநூல் பதிவு ஒன்று இந்துகளின் மனம் காயப்படும் அளவில் சர்ச்சையாக இருந்தது.
இவர் மீது நடவடிக்கை அவசியம் தேவை என ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், முன்னாள் துணை அமைச்சர் ராம் கர்பால், எம்.பிகளான பி.பிரபாகரன், ராயர் சட்டமன்ற உறுப்பினரான குணராஜ் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதோடு பல கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பொது மக்களும் போலீஸ் புகார் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெளுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் ஏன் சம்ரி வினோத்தின் பதிவு இன்னும் அகற்றப் படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதற்கு இடையில் ம.இ.காவின் இளைஞர் பிரிவை சார்ந்த தமிழ் ஈஸ்வரன் இது தொடர்பாக எம்.சி.எம்.சி-க்கு புகார் கொடுத்த நிலையில் அந்த புகார் முகநூல் நிறுவனமான (Meta) -வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களது விதிமுறை வரையறையை அந்த பதிவு மீறி உள்ளதால் அந்த பதிவு முகநூலில் இருந்து அகற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சில் மற்றும் எங்களுக்கு இது தொடர்பாக (எந்த முறையில் புகார் கொடுப்பது) என ஆலோசனை வழங்கிய டத்தோ சிவபாலன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவிப்பதாக தமிழ் ஈஸ்வரன் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பாக தகவல் தொடர்பு துறை அமைச்சிடம் கேட்ட போது அவர்கள் இதனை உறுதி செய்தனர்.
0 Comments