loader
இந்த நாட்டின் அமைதியை கெடுக்கும் நபர்கள் மீது சொஸ்மா சட்டம் பாய வேண்டும் ! - கேசவன் கந்தசாமி

இந்த நாட்டின் அமைதியை கெடுக்கும் நபர்கள் மீது சொஸ்மா சட்டம் பாய வேண்டும் ! - கேசவன் கந்தசாமி

யூஎஸ்ஜே, மார்.7-

இந்த நாட்டின் அமைதியை கெடுக்கும் நபர்கள் மீது சொஸ்மா சட்டம் பாய வேண்டும் என தேசிய மஇகாவின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர்

கேசவன் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் தற்பொழுது இந்து சமயத்தை இழிவு படுத்தி பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஷம்ரி வினோத் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று மஇகாவின் இளைஞர் படையோடு கேசவன் யூஎஸ்ஜே (8 )போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் அளவிற்கு இந்து சமயத்தையும் இந்துக்களின் வழிப்பாட்டு முறையையும் இழிவுப்படுத்தும் வகையில் ஷம்ரி வினோத் என்பவர் முகநூலில் பதிவு செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பல இடங்களின் அரசியல் தலைவர்கள், அரசு சாரா இயக்கங்களின் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் மஇகாவின் சார்பில் மஇகா சிலாங்கூர் இளைஞர் பிரிவு தலைவர் கோபிராஜ், இளைஞர் பிரிவின் தகவல் தொடர்பு தலைவர் நவின்ட்ரன், சுபாங் வட்டார இளைஞர் பிரிவு தலைவர் தர்வின், செப்பாங் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் குணா மற்றும் செந்தில் குமார் அகியோர்

ஷம்ரி வினோத் மீது போலீசார் சொஸ்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளனர்.

சமயத்தை இழிவு படுத்தும் சம்பவங்கள் அன்மைய காலமாக குறைந்து காணப்பட்டது.ஆனால் தற்பொழுது நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் இது போன்ற சம்பவங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

ஷம்ரி வினோத்தின் நடவடிக்கையை கண்டித்து இன்று மஇகாவின் தேசிய துணைத் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில், தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் ஷம்ரி வினோத் போன்ற நபர்கள் மீது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமின்றி இவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கும் அதோடு நாட்டின் அமைதியும் சீராக இருக்கும் என்றார்.

அதன் அடிப்படையில் நாங்கள் இன்று இந்த போலீஸ் புகாரை செய்தோம் என கேசவன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News