loader
மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் முயற்சியில்  GV Ride எனும் இ-ஹேலிங் நிறுவனம் மார்ச் மாதம் முழுவதும் இலவசப் பயண சேவையை வழங்குகிறது!

மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் முயற்சியில் GV Ride எனும் இ-ஹேலிங் நிறுவனம் மார்ச் மாதம் முழுவதும் இலவசப் பயண சேவையை வழங்குகிறது!

சுபாங் ஜெயா,பிப்.26-

மக்களின் வாழ்வாதார செலவினத்தை தளர்த்தும் நோக்கில், GV Ride எனும் இ-ஹேலிங் நிறுவனம் மார்ச் மாதம் முழுவதும் இலவசப் பயணங்களை வழங்கும் சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது.

இந்த சேவை சுபாங், பெட்டாலிங் ஜெயா மற்றும் காஜாங் பகுதிகளில்  கிடைக்கப்படும். அவ்வகையில் இந்த திட்டம் மலேசியர்களுக்கான ஒரு மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் GV Car Ventures Sdn Bhd (GVV) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி கபீர் சிங் மாண்ட் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கல்களை நாங்கள் நன்கு அறிவோம். தினசரி செலவுகளை சமாளிக்க மக்களுக்கு கஷ்டம் ஏற்படும் சூழலில் இந்த இலவசப் பயண சேவை நாங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுக்கு அது ஒரு நிவாரணமாக இருக்கும்.

குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சன்வே பிரமிட்டில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் அவர்  கூறினார்.

மேலும் இத்திட்டத்தின் வழி GV Ride தனது அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான பயணம், மின்னியல் கட்டணம் மற்றும் வெளிப்படையான விலை நிர்ணய அமைப்பு போன்ற பல அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க முயல்வதாக அவர் சொன்னார்.

 

GV Ride இன் படி, ஒவ்வொரு பயனரும் ஒரு நாளைக்கு சவாரியை வெ.30 கட்டண வரம்புடன் அனுபவிக்க தகுதியுடையவர்கள். இந்த கட்டணத்தில் டோல் கட்டணம் சேர்க்கப்படும்.

 

கட்டணம் வெ.30ஐ விட அதிகமாக இருந்தால், பயனர் கூடுதல் நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்.

0 Comments

leave a reply

Recent News