போர்ட் கிள்ளான், டிச 27-
சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அனைத்துலக காற்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
நாளை 28 மற்றும் மறுநாள் 29 டிசம்பர் 2024 அன்று போர்ட் கிள்ளானில் உள்ள டத்தோ ஆறுமுகம் விளையாட்டு அரங்கத்தின் மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது என சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் மூ. சு. மணியம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு சிலாங்கூர் தமிழ் பள்ளிகளுக்கான காற்பந்து போட்டியின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, உலக அளவிலான பல திறமையான குழுக்களும் இப்போட்டியில் பங்கேற்க உள்ளன.
பிரெஞ்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளன.
கால்பந்து விளையாட்டுப் பிரியர்கள் அனைவரும் இப்போட்டியை நேரில் பார்த்து மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments