loader
15 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து ஜெய் பிரபாகரன் சாதனை!

15 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து ஜெய் பிரபாகரன் சாதனை!


கோலாலம்பூர்,நவ.9-
உடற்பயிற்சி பயிற்றுநரான கே.ஜெய் பிரபாகரன் (வயது 27) 15 மணி நேரம் இடைவிடாது உடற்பயிற்சி மையத்தில் தொடர்ச்சியாக பயிற்சி செய்து மலேசிய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

எனது இந்த வெற்றி கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்படும் என்று காத்திருக்கிறேன் என அவர் உறுதியாக கூறினார். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அவர் 12 மணி நேரம் உடல் பயிற்சி செய்து சாதனை படைத்த வேளையில் அந்த சாதனயை முறியடித்து 15 மணி நேரம் இடைவிடாது பயிற்சி செய்து இந்த வெற்றியை அவர் படைத்துள்ளார்.

குடும்பத்தின் நான்காவது மகனான இவர் 20 ஜிம் இயந்திரங்களை அதன் உடற்பயிற்சி கருவிகளையும் குறிப்பாக ட்ரெட்மில், டம்பெல், சைக்கிளிங் போன்ற கருவிகளை காலை 6:30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தொடர்ச்சியாக பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

மேலும் டாக்டர் கேஜே என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் ஜெய் பிரபாகரன் வெறும் தண்ணீரை குடித்துக் கொண்டும் இலகுவான உணவுகளை உட்கொண்டும் இந்த பயிற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

அவரது தாயாரான எஸ்.சுகுணா மலர் (வயது 66) தான் தனது இந்த உறுதிப் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தார் என கேஜே தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News