திருச்சி, அக். 11-
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து பரபரப்பை ஏற்ப்படுத்திய ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி போராடி வந்தார். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உட்பட தீயணைப்பு படை விமான நிலையத்தின் ஓடுபாதையில், தயார் நிலையில் இருந்தது.
இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு அந்த விமானம் தற்பொழுது பாதுகாப்பாக தரையிறக்கப்படுள்ளது என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தற்பொழுது அந்த விமானத்தில் பயணித்த 141 பயணிகளுக்கும் முதல் உதவி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
ஆனால்,ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சக்கரங்கள் உள்ளே சொல்ல முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments