கோலாலம்பூர், செப் 2-
பெட்டாலிங் உத்தாமா மாவட்ட ரீதியிலான பூப்பந்து போட்டி விளையாட்டிற்கு தேர்வாகி தமிழ்ப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவி பாவினி மோகன்.
சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் மணவியாகிய இவர், தனது சிறுவயதிலேயே அதிகமான போட்டி விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவ்வகையில் பள்ளி அளவிலான போட்டி விளையாட்டில் விளையாட்டு வீராங்கனையாகவும் இவர் சாதனை படைத்து தனது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டு மட்டுமின்றி கல்வியிலும் மற்ற மாணவர்களை போல் இவர் மிகச் சிறந்தவர் என்பதற்கு உதாரணமாக பள்ளியில் தலைமை மேற்பார்வையாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும் இவர் ஆர்.ஆர்.ஐ பூப்பந்து போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே மணவி பாவினி மேலும் பல போட்டி விளையாட்டுகளில் வெற்றி பெற்று எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க வேண்டும் என தமிழ் லென்ஸ் ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
0 Comments