செந்தூல்,ஜூலை.18-
செந்தூல் வட்டார அளவில் நடைபெற்ற 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலை வெற்றி வாகை சூடியது.
பள்ளியின் முதன்மை பயிற்றுனரான ஆசிரியர் திருமதி கவிதா லெட்சுமனனின் அயராத உழைப்பும் மாணவர்களின் விடாமுயற்சியே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த 2019-இல் இரண்டாம் நிலையை அடைந்த இப்பள்ளி மீண்டும் 2024-இல் சாதனைப்படைத்திருக்கிறது என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு கார்த்திகேசு இராஜகோபால் அவர்கள் தெரிவித்தார்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஊக்கமும் இம்மாணவர்கள் வெற்றியடைய ஒரு தூண்டுகோளாக விளங்குகிறது எனலாம். இன்னும் வருங்காலங்களில் கூடைப்பந்து போட்டியில் பல சாதனைகளைப் படைக்க மாணவர்களை ஆயத்தம் செய்ய பல முயற்சிகளும் சிறப்பான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-காளிதாசன் தியாகராஜன்
0 Comments