loader
இம்மாதம் திரையரங்குகளை அலங்கரிக்கும் இந்தியன் 2  மலேசிய ரசிகர்களை சந்தித்தார் கமல்

இம்மாதம் திரையரங்குகளை அலங்கரிக்கும் இந்தியன் 2 மலேசிய ரசிகர்களை சந்தித்தார் கமல்

கோலாலம்பூர், ஜூலை.3-

நீண்ட நாட்கள் நாம் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியன் 2 திரைப்படம்  இம்மாதம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.

1996 ஆம் ஆண்டில் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் பாகம் 1 மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அனைவரின் மனதில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மீண்டும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் அனிருத் இசையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மாபெரும் நடிப்பில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இம்மாதம் ஜூலையில் மிக பிரம்மாண்டமாக வெளிவருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அக்குழுவினர் கடந்த ஜூன் 28 ஆம் திகதி  மலேசியாவிற்கு வருகை தந்தனர்.

தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள NU SENTRAL அருங்காட்சியகத்தில் ரசிகர்களின் மத்தியில் இந்தியன் 2 திரைப்படத்தை அவர்கள் விளம்பரம் செய்தனர்.

இந்நிகழ்விற்கு தனது ரசிகர்களை சந்திக்க திரைப்படத்தின் கதாநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் உட்பட நடிகர் சித்தார்த் மற்றும் எஸ்.ஜே சூரியா ஆகியோர் வருகை தந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் உட்பட பொது மக்களும் கலந்துக்கொண்டனர். அச்சமயம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுத்த கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அடுத்து இந்தியன் 3 பாகம் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அவர் கூறிய தகவல் ரசிகர்களின் மத்தியில் பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்தியது.

Lyca productions மற்றும் Red Giant Movies இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படதைச் சிங்கப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் திரைப்பட விநியோகஸ்தருமான 3 Dot Movies நிறுவனம்  மலேசியாவில் வெளியீடு செய்கிறது.

இந்நிறுவனம் மலேசியாவில் சுமார் 156 திரையரங்குகளுக்கு மேல் இத்திரைப்படத்தை வெளியீடு செய்கிறது. மலேசியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெளியீட்டு நிறுவனம் கூறியுள்ளது. ஆகவே இந்தியன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று காண தவற வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

- காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News