ஷாஆலம், ஜூன்.29-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 20 ஆம் ஆண்டாக நடைபெறும் சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் 96 அணிகள் களமிறங்குகிறது என அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை உறுதிபடுத்தினார்.
இல்கால்பந்து போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 72 அணிகள் களமிறங்கவுள்ளனர்.அதே போன்று பெண்கள் பிரிவில் 24 அணிகளும் களமிறங்கவுள்ளன.ஆக மொத்தத்தில் 96 அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன என்பதை அவர் தெரிவித்தார்.
இந்த போட்டிக்கான குலுக்கல் நிகழ்வு அண்மையில் ஷாஆலம் சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்று முடிந்தது.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கால்பந்துப் போட்டியில் ஆண்கள் வெற்றி பெறும் குழுக்களுக்கு 5,600 ரிங்கிட்டும் ரொக்கமும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 5,200 ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் ஆண்களுக்கான போட்டி நடத்தப்படவுள்ளது.
பெண்கள் பிரிவுக்கான போட்டி முன்னாள் தலைவர் அமரர் ரவீந்திரன் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற குலுக்கல் நிகழ்வில் துணை தலைவர் குணசேகரன், கென்னத் கண்ணா, செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்
0 Comments