கோலாலம்பூர், ஜூன் 6-
தலைநகரில் பிராண்டான தங்க நகைகளை உங்களுக்காக விற்பனை செய்து வரும் ஜோயாலுக்காஸ் நிறுவனம் அதன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிளையின் மகத்தான திறப்புவிழா கூடிய தனது 10ஆவது ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடியது.
1 ஜூன் 2024 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வானது, இந்த பிராண்டின் வெற்றிப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
ஜோயாலுக்காஸ் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ஜான் பால் ஆலுக்காஸ், இயக்குநர் திருமதி சோனியா ஆலுக்காஸ் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் இந்நிகழ்வு துவக்கிவைக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த புதிய வடிவமைப்பிலான தங்கநகைகளை பெறுவதற்கான அனுபவத்தை வழங்கும் வகையில் ஜோயாலுக்காஸ் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.
இந்த துடிப்பான சந்தையில் நாங்கள் எங்களது வெற்றிப்பயணத்தின் 10 ஆண்டுகள் நிறைவினை கொண்டாடும் இத்தருணத்தில், மலேசியாவில் எங்களிடம் ஏகோபித்த ஆதரவை அளித்த தங்க நகைகள் பிரியர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் விதத்தில் அவர்கள் வாங்கும் நகைகள் மீது ஒரு இலவச பரிசை அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் என்று திரு.ஜான் பால் தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவை ஒட்டிய 10ஆவது ஆண்டு விழா சலுகையில் ஒவ்வொரு முறை வெ.4,000 மதிப்பில் தங்க நகைகளை வாங்கும் போது 0.200 கிராம் தங்க நாணயமும் மற்றும் வெ.5,000 மதிப்பில் டயமண்ட், போல்கி மற்றும் முத்து நகைகளை வாங்கும்போது 1 கிராம் தங்க நாணயமும் வெகுமதியாக வழங்கப்படும்.
9 ஜூன் 2024 வரை உள்ள இந்த வியப்பூட்டும் சலுகைகள் ஜோயாலுக்காஸின் அனைத்து ரகங்களிலான நேர்த்தியான ஆபரண தொகுப்புகளிலும் வழங்கப்படும். உலகின் மனங்கவர்ந்த தங்க நகைகள் நிறுவனமான ஜோயாலுக்காஸ் தரம் மற்றும் சேவை மீதான அதன் நிலையான அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக மலேசியா முழுவதும் பல தங்க நகைகளின் ஆர்வலர்களை கவர்ந்திழுத்து வருவதன் மூலம் இந்நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. இந்நிறுவனம் சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற உலக நாடுகளில் அதன் விரிவாக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: காளிதாசன் இளங்கோவன் படம் : தீபன் கிருஷ்ணன்
0 Comments