loader
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முன்னிலை

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முன்னிலை

சென்னை,  ஜூன் 04-

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்.19ல் தேர்தல் நடந்தது.

இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, நீலகிரி, சிவகங்கை, நாமக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக., கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

அ.தி.மு.க., கூட்டணி 1 மற்றும் பா.ஜ., கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. நெல்லை தொகுதியில் தபால் ஓட்டுகளில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

0 Comments

leave a reply

Recent News