loader
நவம்பரில் எம்எச்370 விமானத்தை தேட ஓஷன் இன்பினிட்டி திட்டம்!

நவம்பரில் எம்எச்370 விமானத்தை தேட ஓஷன் இன்பினிட்டி திட்டம்!


கோலாலம்பூர், மே 4-
கடல் ரோபட்டிக் நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி காணாமல் போன மலேசிய விமானமான எம்எச்370ஐ நவம்பர் மாதத்தில் தேட திட்டமிட்டுள்ளது. அமைச்சரவையில் அதற்கான முழு ஆதரவு கிடைத்தால் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இந்த தேடல் நடவடிக்கைக்கு தயாராக குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் பிடிக்கும். அனைத்தும் முறையாக நடந்தால் நவம்பர் மாதத்தில் எம்எச்370 விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்படலாம் என்றார் அவர்.

தென் இந்திய பெருங்கடலில் நிலவும் வானிலை காரணமாக தேடும் பணியை இப்போது தொடங்க முடியாது. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலநிலை மிகவும் பொருத்தமானது என ஓஷன் இன்பினிட்டி கூறியுள்ளது என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அமைச்சு நடத்திய சந்திப்பில் எம்எச்370 விமான தேடல் நடவடிக்கை தொடர்பில் அந்நிறுவனம் புதிய தேடல் நடவடிக்கை குறித்த திட்டத்தை முன்வைத்ததாக அவர் சொன்னார்.

0 Comments

leave a reply