loader
மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தின் சமூக சேவை: கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உதவி!

மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தின் சமூக சேவை: கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உதவி!


கோலாலம்பூர், மே 3-
நாட்டில் முதல் தங்கு விடுதி கொண்ட கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்குக் கொண்டனர். மன்றத்தின் சார்பாக மாணவர்களுக்கு பரிசுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டததாக மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் என்ற தேவ் தெரிவித்தார்.

மேலும் அப்பள்ளிக்கு கனிசமான தொகையை மன்றத்தினர் வழங்கினர். அதுமட்டுமின்றி அப்பள்ளியின் தங்கு விடுதியிலுள்ள மாணவர்களும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களையும் அவர்கள் வாங்கி தந்துள்ளனர்.

மெலும் அப்பள்ளியின் ஃவோலி போல் மற்றும் கிரிக்கெட் அணிகளுக்கு தலா 20 விளையாட்டு சட்டைகளையும் மன்றத்தினர் வழங்கியுள்ளனர்.

அன்றைய நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள் என 200 பேருக்கு வாழை இலை உணவுடன் விருந்தளிக்கப்பட்டதாக தேவ் சொன்னார்.

அப்பள்ளிக்கு உதவிகள் தேவைப்படுவதாக செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் அப்பள்ளிக்கு மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தினர் சென்று தேவையானவற்றை கேட்டு அறிந்தனர். அதனை தொடர்ந்து இம்மாதத்தில் அந்த உதவியை அவர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த சமூக சேவைக்கு உதவியாக இருந்த நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் உறுப்பினர்களுக்கும் தேவ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

0 Comments

leave a reply