loader
கோபிரிமாஸ் கூட்டுறவு கழகத்திற்கு வெ.1 லட்சம் மானியம்: டத்தோ ரமணன் அறிவிப்பு!

கோபிரிமாஸ் கூட்டுறவு கழகத்திற்கு வெ.1 லட்சம் மானியம்: டத்தோ ரமணன் அறிவிப்பு!

கோலாலம்பூர், மே.3-

மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் வாயிலாக கோபிரிமாஸ் கூட்டுறவு கழகத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் உதவி மானியம் வழங்கப்படும் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.

மக்களின் பொருளாதாரம், சமூக தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தொடர்ந்து வளர்ச்சியை கொண்டு வருவதிலும் கூட்டுறவு கழகங்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.

கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 352 இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில்  255,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

352 இந்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 1.75 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இதன் மொத்த பங்கு மூலதனம் 618.74 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் இந்தியக் கூட்டுறவு கழகங்கள் இன்னும் சிறப்புடன் செயல்படும் பட்சத்தில் சமூக மக்களின் பொருளாதாரமும் மேம்பாடு காணும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என கோபிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் கூட்டுறவு கழகத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு கழகங்களின் மேம்பாட்டிற்காக அரசு 200 மில்லியன் மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை அனைத்து கூட்டுறவு கழகங்களும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

வழங்கப்பட்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே மேலும் அதிக வாய்ப்புகளை நாம் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும் என அவர் கேட்டுக்கொண்டார்.

0 Comments

leave a reply