loader
கோபத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி எதிர்க்கட்சிக்கு வாக்களிக்காதீர்!

கோபத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி எதிர்க்கட்சிக்கு வாக்களிக்காதீர்!


கோலாலம்பூர்,மே 3-
கோல குபு பாரு இடைத்தேர்தலில் அரசியல் சூழ்நிலை காரணமாக கோபத்தில் எதிர்க்கட்சிக்கு மக்கள் ஆதரவளித்திடக் கூடாது என்றும் அதன் விளைவை எதிர்நோக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர் எனவும் ஜசெக தேசியத் தலைவர் லிம் குவான் எங் நினைவூட்டினார்.

மாநிலத்திலும் மத்திய அரசாங்கத்திலும் ஆட்சி நடத்தும் ஒற்றுமை அரசாங்கத்தை மக்கள் ஆதரவளித்தால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகள் களையப்படும் என அவர் சொன்னார்.

வாய்க்கு வந்ததை யார் வேண்டுமானாலும் பேசலாம். வாக்காளர்களை குழப்பமடைய செய்யலாம். ஆனால் கோபத்தில் எடுக்கப்படும் முடிவால் அவதிப்பட போவது மக்கள்தான். ஆகையால் எதிர்காலத்தை மனதில் வைத்து கேகேபி வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி முறையில் ஓரிரு குறைகள் இருக்கிறது. குறிப்பாக விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆனால் அதனை உடனடியாக தீர்த்துவிட முடியாது. அதனை சரி செய்ய அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் பேச்சை நம்பி எதிர்க்கட்சி வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுத்தால் மட்டும் நிலைமை மாறிவிடுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. காலம் கடந்தாலும் பொருமை காத்தல் அவசியம். இந்திய சமுதாயத்திற்கும் போதுமான மானியம் கிடைக்காததும் அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒருபோதும் எதிர்க்கட்சியினரால் அதனை சரி செய்ய முடியாது. ஆகையால் மக்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளைரை ஆதரிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

0 Comments

leave a reply