loader
கெசுமா - மித்ரா திட்டத்திற்கு நிதி! பிரதமரின் அறிவிப்புக்கு மனிதவள அமைச்சு வரவேற்பு!

கெசுமா - மித்ரா திட்டத்திற்கு நிதி! பிரதமரின் அறிவிப்புக்கு மனிதவள அமைச்சு வரவேற்பு!

கோலாலம்பூர், மே 2-

மனிதவள அமைச்சு, கெசுமாவும் மித்ராவும் இணைந்து செயல்படுத்தவுள்ள இந்திய சமூகத்தின் இளைஞர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் திட்டம் (மிசி)-க்கு 30 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் அன்வாரின் அறிவுப்பு வரவெற்கத்தக்கது என்று மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் தெரிவித்துள்ளார். 

மனிதவள அமைச்சுடன் மித்ராவும் இணைந்து திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கு மிசி திட்டம் முன்னெடுக்கப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி கெசுமாவின் மூலமாக நிதியமைச்சு, மலேசிய இந்தியச் சமூக உருமாற்று பிரிவான மித்ரா, எச்ஆர்டி கோர்ப் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்டிவன் சிம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த முயற்சியானது தொழில்துறையின் தேவைகளையும் நாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முக்கியமான கடப்பாட்டைக் கொண்டுள்ளது. 

இந்தத் திட்டமானது கெசுமா 3K எனப்படும் ஊழியர்களின் திறன்கள், வெற்றி மற்றும் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். 

இந்த நடவடிக்கையானது இந்திய சமுதாயத்தின் நலனிளும் ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்து காட்டுகிறது.

மனிதவள அமைச்சும் மித்ராவும் இணைந்து செயல்படுத்தும் மிசி பயிற்சி திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டிவன் சிம் தனது அறிக்கையில் கூறினார்.

0 Comments

leave a reply