loader
கேகேபி இடைத்தேர்தல்: சரியான பிரதிநியை மக்கள் தேர்ந்தெடுக்க தவறினால் அதற்கான பொறுப்பை ராமசாமி ஏற்க வேண்டும்! -டத்தோ ரமணன்

கேகேபி இடைத்தேர்தல்: சரியான பிரதிநியை மக்கள் தேர்ந்தெடுக்க தவறினால் அதற்கான பொறுப்பை ராமசாமி ஏற்க வேண்டும்! -டத்தோ ரமணன்

 

கோலாலம்பூர், ஏப்.29-
கேகேபி இடைத் தேர்தலில் சரியான பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க தவறினால் அதற்கான பொறுப்பை உரிமை கட்சியின் தலைவர் பி.ராமசாமி ஏற்க வேண்டுமென தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் தெரிவித்தார்.

கேகேபி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தில் பினாங்கு மாநில முன்னாள் துணையமைச்சருமான ராமசாமி இறங்கியுள்ளார். இவரின் பிரச்சாரம் வெற்றிப் பெற்றால் எதிர்காலத்தில் இவ்வட்டார மக்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணாவிடில் அவரே அதற்கு பொறுப்பாவார்.

எதிர்க்கட்சியினர் ஆட்சி புரியும் தொகுதிகளில் பிரச்சினை எழும்போது, நாங்கள் ஆட்சியில் இல்லை, முறையான மானியமும் எங்களுக்கு கிடைப்பதில்லை என எதிர்க்கட்சியினர் கூறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆகையால் கோல குபு பாரு மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை நிகழ்ந்தால் ராமசாமி அங்கு களமிறங்குவாரா என டத்தோ ரமணன் கேள்வி எழுப்பினார்.

கோல குபு பாரு மக்கள், குறிப்பாக இந்தியர்கள் ராமசாமியின் பிரச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக பேசும் ராமசாமியின் பேச்சை நம்பிவிடக் கூடாது என்றும் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply