loader
நாட்டின் 16ஆவது தேர்தலிலும் ஒற்றுமை அரசாங்கத்தை அம்னோ ஆதரிக்கும்!

நாட்டின் 16ஆவது தேர்தலிலும் ஒற்றுமை அரசாங்கத்தை அம்னோ ஆதரிக்கும்!


கோலாலம்பூர், ஏப்.28-
நாட்டில் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் தேசிய செழுமைக்காகவும் அடுத்த பொதுத் தேர்தலிலும் ஒற்றுமை அரசாங்கத்தை அம்னோ தொடர்ந்து ஆதரிக்கும் என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் 18 கட்சிகள் உள்ளன. அவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே சிந்தனையுடன் செயல்படுகின்றன. வரும் 16ஆவது பொதுத் தேர்தல் இந்த அனைத்து கட்சிகளும் ஒரே குறிக்கோளுடன் களமிறங்கும் தேர்தலாக அமையும் என அவர் சொன்னார்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் காட்டும் தற்போதைய 152 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் வேறுபட்டவை மற்றும் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன என தான் நம்புவதாக அவர் சொன்னார்.

கோல குபு பாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணி முழுமையாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். பழைய காணொளி ஒன்று தற்போது சர்ச்சையாக்கப்பட்டு அதன் தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. பழையதை நாம் பேசுவதை நிறுத்த வேண்டும். ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்காக நாம் ஒன்றிணைய வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply