loader
தமிழுக்கு அமுதாகவும் வாழ்க்கை பாடமாகவும் தமிழிசைப் பாடல்கள்! -சி.பாண்டித்துரை

தமிழுக்கு அமுதாகவும் வாழ்க்கை பாடமாகவும் தமிழிசைப் பாடல்கள்! -சி.பாண்டித்துரை

சைபர்ஜெயா, ஏப்.27-

நம் வாழ்க்கை பாடமாக நமது தமிழிசைப் பாடல்கள் பல வாழ்க்கை தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது என வழக்கறிஞர் சி.பாண்டித்துரை கருத்துரைத்தார்.

'இளைஞர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் தமிழிசைப் பாடல்கள்' என்ற தலைப்பையொட்டி தமிழ் அமுது 1 இலக்கியம் மற்றும் விருது விழாவில் பேசிய அவர் இக்கருத்தை தமதுரையில் முன்வைத்தார்.

தமிழ் பாடல்களை எழுதிய கவிஞர்கள் தங்களின் பாடல் வரிகளின் வழி நமக்கு பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளனர். அதனை நாம் நமது வாழ்க்கையில் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் திரைப்பட பாடல்களின் மூலம் நாம் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வ பண்புகளை கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதாரணமாக பல பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் திரைப்படங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அவற்றில் குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களும் அதற்கு ஓர் உதாரணம். தமிழை பாடல் வரிகளில் நம்மை ரசிக்க வைத்த கவிஞர்களில் கண்ணதாசனும் ஒருவர் என்ற பெறுமையை நாம் மறுக்க முடியாது.

நம் தமிழ் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் பலரின் வாழ்க்கை முறையை மாற்றியிள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருக்கும் பல தலைவர்களும் தமிழ் ஆர்வாளர்களும் தமிழ் பாடல் வரிகளில் கூறப்படும் கருத்துக்களை புரிந்து தன் வாழ்க்கையில் மாபெறும் சாதனைகளை செய்துள்ளனர்.

ஆகவே பாடல்கள் வாயிலாகவும் தமிழ் நம்முல் வாழ்கிறது என்பதை புரிந்து, நல்ல கருத்துக்கள் உள்ள தமிழ் பாடல்களை நாம் கேட்ட வேண்டும். பாடல்களின் வழி நாம் பல ஆக்கப்பூர்வ அறிவுகளை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

0 Comments

leave a reply