loader
உலு சிலாங்கூரை முழுமையாக கைப்பற்ற பெரிக்காத்தான் முயற்சி!

உலு சிலாங்கூரை முழுமையாக கைப்பற்ற பெரிக்காத்தான் முயற்சி!

கோலாலம்பூர், ஏப்.27-

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் எதிர்பார்க்காத அளவிற்கு பல தொகுதிகளில் வெற்றிப் பெற்று அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 நான்கு முறை தேசிய முன்னணி வெற்றிப் பெற்று பக்காத்தான் கையில் இருந்த உலு சிலாங்கூர் தொகுதியை கடந்த தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வென்றதுடன் அதன் அங்குள்ள உலு பெர்னாம் மற்றும் பத்தாங் காலி சட்டமன்ற தொகுதிகளையும் அது வென்றது. கோல குபு பாரு தொகுதியை மட்டும் பக்காத்தான் ஹராப்பான் வென்றது. தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் இன்று வேட்புமனு தாக்கல் நடக்கிறது.

வேட்புமனு தாக்கலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரும் பதிவு செய்ய வந்துள்ள வேளையில் இரு கூட்டணிகளை ஆதரித்து தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். அண்மையில் பக்காத்தான் ஹராப்பான் எம்பி நாடாளுமன்றத்தில் மக்களை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட சொல்லியது பெரும் சர்ச்சையானது. அதனை குறி வைத்து பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் நடக்கும் இடத்தில் மரவள்ளிக்கிழங்குகளை வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை அந்த கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக ஆதரிக்கின்றன. பாஸ் கட்சியும் முழு ஆதரவை தெரிவிக்கிறது. ஆகையால் இம்முறை கோல குபு பாரு தொகுதியை வென்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் தன் வசப்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் முழு மூச்சாக போராடி வருகிறது.

அந்த வகையில் 4-0 என்ற கணக்கில் பெரிக்காத்தான் நேஷனல் உலு சிலாங்கூரை முழுமையாக வெல்ல சபதத்துடன் போராடி வருகிறது. அடுத்த மாதம் 11ஆம் தேதி கோல குபு பாருக்கான இடைத்தேர்தல். தேர்தல் முடிவில் பெரிக்காத்தான் நேஷனலின் சபதம் வெல்லுமா என்பதை பார்ப்போம்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply