loader
புதிய இளைய தலைமுறைக்கு  தமிழ் பற்றும் தமிழாற்றலும் தேவை! -டத்தோஸ்ரீ  தெய்வீகன்

புதிய இளைய தலைமுறைக்கு தமிழ் பற்றும் தமிழாற்றலும் தேவை! -டத்தோஸ்ரீ தெய்வீகன்

சைபர்ஜெயா, ஏப்.27-

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழ் மொழி கல்வி ஆற்றலையும் புகுத்த வேண்டும் என கோ.சா. கல்வி அறவாரியத்தின் தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன் தெரிவித்தார்.

தமிழ் மொழி வளர்சிக்கும், தமிழர்களின் எழுச்சிக்கும் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிவரும் பலன் அறக்கட்டளை மற்றும் கோ.சா. கல்வி அறவாரியத்தின்  ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் அமுது 1 இலக்கிய விழா மற்றும் விருது விழா 2024 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் இக்கருத்தை முன்வைத்தார்.

நம் முன்னோர்கள் நமக்கு பல வழிகளில் தமிழின் சிறப்புகளையும் அதன் விளக்கங்களையும் முறையாக 

பதிவு செய்து சென்றுள்ளனர். தமிழ் என்பது மொழி மட்டும் இல்லை. அதில் நம் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்ற பல தத்துவங்களும் அமைந்துள்ளது. 

ஆகவே இத்தகைய சிறப்பு அம்சங்கம் கொண்ட தமிழ் மொழியை இன்றைய கால இளைஞர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். நமது காலத்தோடு தமிழ் மொழி மறைந்துவிடாமல் இருக்க வரும் புதிய தலைமுறைக்கு அதனை முறையாக எடுத்து செல்ல வேண்டும் என இன்றைய நிகழ்ச்சியில் தலை நிமிர் தமிழா என்ற தலைப்பில் பேசிய டத்தோ தெய்வீகன் தெரிவித்தார்.

அவ்வகையில் இது போன்ற தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அது சாத்தியப்படும் எனவும் இன்று சைபர்ஜெயா பல்கழைக்கழகத்தில்  இந்த இலக்கிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு இதுவே ஒரு முக்கிய காரணம் என அவர் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

0 Comments

leave a reply