loader
வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதை புறக்கணியுங்கள் !

வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதை புறக்கணியுங்கள் !

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று சிலர்  சொல்வதை பொருட்படுத்த வேண்டாம் என்று செந்தோசா சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர்கள் கோலகுபு பாரு வாக்காளர்கள் இல்லை. ஆகவே இவர்களை புறக்கணித்து விட்டு 

 மே 11 -ஆம் தேதி வாக்களிக்க கோலகுபு பாரு இந்தியர்கள் முன் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் இந்தியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, ஆகவே கோலகுபு  தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தியர்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர்.

இது புதிய அரசாங்கம். இப்போதுதான் ஒன்றரை ஆண்டுகள். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓற்றுமை அரசாங்கம் இந்தியர்களுக்கு நிறைவான வகையில் சேவையாற்றும் என்று அவர் சொன்னார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் பி.கே.ஆர் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்கி இருப்பதாக கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்தியர் அமைப்புக்கள், இந்திய மாணவர்கள், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளது.

ஆகவே கோலகுபு பாரு இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

0 Comments

leave a reply