loader
4 நாடுகள் பங்கேற்ற ஆசியான் வெட்ரன் கால்பந்துப் போட்டி !  டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

4 நாடுகள் பங்கேற்ற ஆசியான் வெட்ரன் கால்பந்துப் போட்டி ! டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

சிரம்பான், ஏப்.20-

4 நாடுகள் பங்கேற்ற ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை இன்று மஇகா துணைத் தலைவரும்,தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்.

மலேசியாவை தவிர்த்து இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இருந்து வெட்ரன் விளையாட்டாளர்கள் இங்கு ஒன்றுக்கூடி உள்ளனர்.

இந்த ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்கும் 2020 கால்பந்து குழுவிற்கு எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.

2ஆவது ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துகிறது.

இப்போட்டி இன்றும் நாளையும் சிரம்பான் பண்டார் ஶ்ரீ  செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து 4 அணிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 அணிகளும் கலந்துக்  கொண்டுள்ளன.

மலேசியாவை பிரதிநிதித்து 2020 கிளப் என மொத்தம் 7 அணிகள் கலந்துக் கொண்டுள்ளன என்று அக்கிளப்பின் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற பல நிறுவனங்கள், நல்லுள்ளங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வேளையில் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி என்று ராஜன் கூறினார்.

முன்னதாக இந்த கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.

அதே வேளையில் போட்டியை ஏற்பாடு செய்த 2020 கால்பந்து கிளப்பிற்கும் போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News